facebook pixel
chevron_right Top
transparent
நோய்வாய்ப்பட்ட தாயை விட்டுப்பிரியாத குட்டியானை : பழநியில் ஒரு பாசப்போராட்டம்
பழநி வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட காட்டு யானை தனது குட்டியுடன் தனியார் தோட்டத்தில் தஞ்சமடைந்தது. அதனைவிட்டு பிரிந்து செல்லாத குட்டியானையின் பாசப் போராட்டம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. பழநி வனப்பகுதியில் 26 வயது மதிக்கத்தக்க பெண் யானை, 4 வயது குட்டி ஆண் யானையுடன் கடந்த சில நாட்களாக பாலாறு- பொருந்தலாறு, புளியம்பட்டிப்பகுதியில் உணவு, தண்ணீர் தேவைக்காக உலா வந்தது. நேற்று முன்தினம் இரவு நோய்வாய்ப்பட்ட தாய் யானை, குட்டியுடன் புளியம்பட்டி தனியார் தோட்டத்தில் தஞ்சமடைந்தது. பாசப் போராட்டம் : நேற்று அதிகாலை யானையை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் உட்பட யாரையும் பக்கத்தில் செல்லவிடாமல் பார்வையாளர்களை குட்டி யானை விரட்டியது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App