facebook pixel
chevron_right Top
transparent
கண்மாய்களுக்கு தேடி வந்த தண்ணீர்
உசிலம்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் 7 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மூன்று நாள் தொடர் மழையால் கண்மாய்களுக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2010 ம் ஆண்டுக்குபின் உசிலம்பட்டி பகுதியில் மழைப்பொழிவு மிகவும் குறைவு. இந்த ஆண்டில் ஆடி மாதத்தில் இருந்து சிறிதளவு மழை கிடைத்து மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது. அக்.,9 ல் 15.20 மி.மீ., 10ல் 13.20 மி.மீ., 11 ல் 28.20 மி.மீ., மழைப்பொழிவு கிடைத்துள்ளது. அசுவமாநதி தடுப்பணை, நக்கலப்பட்டி அம்மாகுளம், கருக்கட்டான்பட்டி, மாதரை கண்மாய்களுக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. பல ஆண்டுகளாக வெட்டுக்குழிகளுக்கே தண்ணீர் வராத நிலையில் இந்த ஆண்டு ஓரளவு தண்ணீர் சேர்ந்துள்ளது. விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் விவசாயிகள் நாற்றாங்கால் அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App