facebook pixel
chevron_right Top
transparent
பள்ளி, கல்லூரி செய்திகள்
ஊர்வலம்மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு யுரேகா இயற்பியல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லுாரி முதல்வர் கார்த்திகாராணி துவக்கினார். ஊர்வலத்தை இயற்பியல் துறை தலைவர் கவிதா, மாணவிகள் மணிமாலா, முத்துச்செல்வி, திவ்யபாரதி, லுார்து ஸ்டேபிகிராப் வழிநடத்தினர். மதுரை பனையூரில் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., குழு சார்பில் இலவச கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் விஜயராணி தலைமை வகித்தார். டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் இலவச தடுப்பூசி, சினை ஊசி செலுத்தப்பட்டது. மதுரை துாய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் இயக்கத்தின் 75ம் ஆண்டு பவள விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App