facebook pixel
chevron_right Sports
transparent
ஆசிய கோப்பை ஆக்கி: வங்கதேசத்தை 7-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது இந்திய அணி
10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணி இன்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App