facebook pixel
chevron_right Politics
transparent
எம்.என்.எஸ்., கவுன்சிலர்கள் சிவசேனாவில் ஐக்கியம்
மும்பை மாநகராட்சியில், சிவசேனாவில் பலம் திடீரென அதிகரித்துள்ளது, பா.ஜ.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவில், சிவசேனா ஆதரவுடன், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், கூட்டணி ஆட்சி நடக்கிறது. நாட்டில் அதிக வருமானமுள்ள மாநகராட்சியான, பிர்ஹான் மும்பையில், பா.ஜ., ஆதரவுடன், சிவசேனாவைச் சேர்ந்த, விஷ்வநாத், மேயராக உள்ளார். ௨௨௭ கவுன்சிலர்கள் உள்ள இந்த மாநகராட்சியில், சிவசேனாவுக்கு, ௮௪; பா.ஜ.,வுக்கு, ௮௩ கவுன்சிலர்கள் உள்ளனர். சமீபத்தில், வார்டு ஒன்றுக்கு நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ.,வும், சிவசேனாவும் தனித்துப் போட்டியிட்டன. இதில், பா.ஜ., வெற்றி பெற்றது. இதையடுத்து,'விரைவில், மேயர் பதவியை கைப்பற்றுவோம்'என, அக்கட்சி தெரிவித்திருந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App