facebook pixel
chevron_right Top
transparent
கணினி 'டேட்டா'வில் அதிகரிக்கும் முதலீடுகள்
மதுரை, மதுரை யாதவர் கல்லுாரியில் தமிழ் உயராய்வு மையம் சார்பில் கணித்தமிழ் என்ற தலைப்பில் முதல்வர் சம்பத் தலைமையில் கருத்தரங்கு நடந்தது. இதில் சென்னை இன்போசிஸ் தொழில்நுட்ப ஆய்வாளர் ராஜாராமன் பேசுகையில், தொழிலதிபர்கள் பொருட்களுக்கு பதில் தற்போது கணினி டேட்டாவில் (தரவு) முதலீடு செய்வது அதிகரிக்கிறது. கணினி புரட்சிக்கான வித்து தரவு தான். பல்வேறு எழுத்துருக்கள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. மொழி மற்றும் செய்திகளை பகிர்பவர்கள் வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர், என்றார். மைய தலைவர் மோகன் வரவேற்றார். துறை பேராசிரியர் கோபால், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ராமசாமி, முத்துக்கிருஷ்ணன், மாணவி ராஜலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App