facebook pixel
chevron_right Top
transparent
டெங்கு ஆய்வில் அரசு செயலர்
மதுரை, மதுரை புதுார் கற்பக நகர், புதுார், விராட்டிப்பத்து பகுதியில் டெங்கு தடுப்பு குறித்து வீட்டு வசதி நகர்புற மேம்பாட்டுத்துறை செயலர். தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆய்வு செய்தார்.கற்பகநகரில் ஒரு வீட்டின் கழிவுநீரை காலியிடத்தில் விட்ட, வீட்டு உரிமையாளர். மற்றும் காலி இடங்களை சுத்தம் செய்யாத பிளாட் உரிமையாளருக்கு அபராதம் விதித்தார். புதுார் மீன் சந்தையில் கொசு புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கி வைத்திருந்த கடை உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், கூடுதல் கலெக்டர் அம்ரித், டி.ஆர்.ஓ., குணாளன், நகர் நல அலுவலர் சதீஷ் ராகவன், ஆர்.டி.ஓ., கார்த்திகேயன், உதவி கமிஷனர் பழனிச்சாமி, பி.ஆர்.ஓ., சித்ரவேல் ஆகியோர் உடன் சென்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App