facebook pixel
chevron_right Top
transparent
காய்ச்சல் மாணவர்கள்: கண்காணிக்க உத்தரவு
'தொடர் காய்ச்சல், உடல் நல குறைவு உள்ள மாணவர் குறித்து கண்காணிக்க வேண்டும்,' என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.'பள்ளியில் படிக்கும் மாணவர்களில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தாலும்,. மற்றவருக்கு பாதிப்பு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால், சம்பந்தப்பட்ட மாணவர் குறித்து கண்காணித்து, தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்க வேண்டும். உடல் நல பாதிப்பு ஏற்பட்டு, தொடர்ந்து மூன்று நாள் பள்ளிக்கு மாணவர் வரவில்லை எனில் உடனடியாக பெற்றோர், பாதுகாவலரை அழைத்து என்னவென்று விசாரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தை சுத்தமாகவும், சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல், அவ்வப்போது கொசுமருந்து அடித்து நோய் தடுப்பு நடவடிக்கையில் கவனமுடன் இருக்க வேண்டும்,' என சுகாதாரத்துறைஅறிவுறுத்தி உள்ளது.தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், 'காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் குறித்து கண்காணிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சலுடன் மாணவர் வந்தால், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகிறோம்,' என்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App