facebook pixel
chevron_right Top
transparent
மலை காய்கறி தோட்டங்களில் மண் சரிவு:தடுக்க விழிப்புணர்வு அவசர அவசியம்
ஊட்டி;மலை காய்கறி தோட்டங்களில் ஏற்படும் மண் சரிவை தடுக்க விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஊட்டி-எமரால்டு சாலையில், எம்.பாலாடா, கப்பத்தொரை, நஞ்சநாடு ஹாடா, மொட்டோரை, புதுஹட்டி சந்திப்பு, இத்தலார், போர்த்தி, கோத்தக்கண்டி பகுதிகளில் பல ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. மலை காய்கறி விவசாயத்தில், இடத்தை பொறுத்து படிமானங்கள் அமைத்து விவசாயம் செய்ய வேண்டும். சில பகுதிகளில் மலை சரிவான பகுதியில் இருப்பதால் வேறு வழியின்றி விவசாயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலைத்துறை சார்பில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், சிறு விவசாயிகள் கிடைக்கும் இடத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்கின்றனர். மழை சமயத்தில் ஏற்படும் பேரிடர் பாதிப்புகளால் பயிர்கள் பாதிக்கப்படுகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App