facebook pixel
chevron_right Top
transparent
பரதநாட்டியம் ஆடி முதியோரை மகிழ்வித்த 'திருநங்கை'வாய்ப்பு கிடைத்தால் பயிற்சி அளிக்க முடிவு
கூடலுார்;கூடலுார், முதியோர் இல்லத்தில், திருநங்கை, ஒருவர் பரநாட்டியம் ஆடி முதியோரை மகிழ்வித்தார்.கேரளா மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் திருநங்கை மைதிலி; இவர், பரதம் உள்ளிட்ட பல்வேறு நடனங்களில் கற்று, அங்குள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். தவிர்க்க முடியாத சில காரணங்களால், தற்போது, கூடலுாரில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர். தான் கற்ற நடனகலை மூலம், மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து, அதன் மூலம் வாழ வேண்டும், என்ற தன்நம்பிக்கையுடன், போராடி வருகிறார். இவரின் நிலையை அறிந்த, கூடலுார் 'பிளசங்' அறகட்டளை நிர்வாகி ஜூலி, அவர்களுக்கு உதவும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.இந்நிலையில், மேல் கூடலுாரில் உள்ள, ஆசாயபவன் முதியோர் இல்லத்தில் நடன நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், திருநங்கை மைதிலி பங்கேற்று, பரதநாட்டியம் அடி, தன் திறமையை வெளிப்படுத்தி, முதியவர்களை மகிழ்வித்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App