facebook pixel
chevron_right Top
transparent
சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை:ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:சிறுபான்மையினர் சமூகத்தை சார்ந்த கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் கல்வி தொடர்ந்து பயில முடியாத மாணவிகளை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில் 'பேகம் ஹசரத் மஹால் நேஷனல் ஸ்காலர்ஷிப்' என்ற திட்டத்தில் 'மவுலானா ஆசாத் கல்வி ஸ்காலர்ஷிப்' வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சிறுபான்மையினராக கருதப்படும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சிஸ் ஆகிய சிறுபான்மை சமுகத்தில் உள்ள மாணவியருக்கு, 9ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை பயில்வோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App