facebook pixel
chevron_right Top
transparent
கிராமங்களில் நிலவேம்பு பொடி; சுகாதாரத்துறை வினியோகம்
குன்னுார்;குன்னுாரில் டெங்கு பாதிப்புகளை தவிர்க்க, கிராமங்கள் தோறும் மக்களுக்கு நிலவேம்பு பொடியை வழங்கும் முறை துவங்கப்பட்டது.குன்னுார் அருகேயுள்ள தேயிலை எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காய்ச்சல் பரவி வருவதால், கிராமப்புறங்களில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குன்னுார் பகுதிகளில் உள்ள டாக்டர்களிடம் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க தற்போது சித்தா பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி தனலட்சுமி உத்தரவின் பேரில், மருத்துவர் விஜயகுமார் மேற்பார்வையில், மருந்தாளுநர் புஷ்பா மற்றும் குழுவினர் கிராமங்கள்தோறும் சென்று நிலவேம்பு பொடிகளை வழங்கும் பணியை துவக்கியுள்ளனர். 20 கிராம் அடங்கிய பாக்கெட் மூலம் நுாற்றுக்கணக்கான பாக்கெட்டுகளில் நிலவேம்பு பொடிகள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன.இதன் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு பொடிகள் வழங்கப்பட்டன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App