facebook pixel
chevron_right Top
transparent
எல்லை தாண்டிய கல்வி பள்ளி மாணவர்கள் 'குஷி'
ஊட்டி;'புதிய சூழலில் கல்வி கற்பதன் மூலம், மாணவர்களின் மனநிலை புத்துணர்வு பெறுகிறது' என, தெரிவிக்கப்பட்டது.அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கிராமப்புற பள்ளி மாணவ, மாணவியர், நகர்புறங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு சென்று, அப்பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து, கல்வி கற்க வேண்டும். அவ்வகையில், ஊட்டி அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும், 6-8 ம் வகுப்பு மாணவர்கள், 20 பேர், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை, ஊட்டி அரசுப் பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி, இனிப்பு வழங்கி வரவேற்றார்.தமிழ் மற்றும் ஓவிய ஆசிரியர்கள், இரு பள்ளி மாணவர்களையும் ஒருங்கே அமர வைத்து, பாடம் கற்பித்தனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App