facebook pixel
chevron_right Top
transparent
விபத்தில்லா தீபாவளி பண்டிகை :தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு
குன்னுார்;குன்னுாரில் தீயணைப்பு துறை சார்பில், விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில்,'மருத்துவமனை, பள்ளி, பங்க் உள்ளிட்ட பகுதிகளில் வெடிக்க கூடாது; சீன பட்டாசுக்களை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது; பயன்படுத்துபவர்கள் குறித்து உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்; பட்டாசுக்கள் கைகளில் வெடிக்கக்கூடாது; குழந்தைகளிடம் பெரிய வெடி பட்டாசுக்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும்' என்பன உட்பட பல விஷயங்கள் வலியுறுத்தப்பட்டன. மேலும், தீ ஏற்பட்டால் அதனை அணைக்கும் வழிமுறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பொதுமக்களும் நேரடியாக தீயை அணைக்க பயிற்சியும் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஞானசேகரன் தலைமையில், முன்னணி தீயணைப்பாளர்கள் அர்ஜுனன், குமார், ஜெகதீஷ்சந்திரபோஸ், சேகர், சுப்ரமணி, தீயணைப்பாளர்கள் ராமச்சந்திரன், தினேஷ்குமார், நல்லசிவம், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்குமார் ஆகியோர் செயல்விளக்கம் அளித்தனர்.நிகழ்ச்சிக்கு, குன்னுார் ஆர்.டி.ஓ., கீதா பிரியா தலைமை வகித்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App