facebook pixel
chevron_right Top
transparent
இபிஎஸ்-ஓபிஎஸ் மோதல் முற்றுகிறது- பிரதமரை சந்தித்து பன்னீர் புலம்பல்.. சொல்வது நமது எம்ஜிஆர்
பிரதமர் நரேந்திரமோடியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஓபிஎஸ்- உடன் டெல்லி சென்ற அமைச்சர் தங்கமணிக்குப் பிரதமரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தன்னை ஓரம்கட்டுவதை பிரதமரிடம் தெரிவித்தார் பன்னீர்செல்வம்' என செய்தி வெளியிட்டுள்ளது அதிமுகவின் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ். எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு, அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரின் செய்திகளில் காட்டமான விமர்சனக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன. தொடக்கத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஏராளமான செய்திகளை வெளியிட்ட நமது எம்.ஜி.ஆர், கடந்த சில வாரங்களாக மாநில அரசை வறுத்தெடுப்பதை கொள்கையாக வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App