facebook pixel
chevron_right Top
transparent
தூத்துக்குடி அருகே பலத்த சூறை காற்றால் வாழைகள் சேதம்.. விவசாயிகள் கவலை
தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் வீசிய திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்தது. இதனால் அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் கவலையில் உள்ளனர். இதனால் பலர் நஷ்டம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்தது. போதிய மழை இல்லாமல் விவசாயிகள் திண்டாடி வந்தனர். இந்தப் பகுதியில் வாழைகள் பயிர் செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை காப்பாற்ற தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் தாமிரபரணியில் தண்ணீர் திறந்தும் கூட விவசாயிகள் பயிர் செய்துள்ள வாழைகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கருகும் நிலையில் இருந்த வாழைகளை காப்பாற்ற விவசாயிகள் தீவிரமாக முயற்சி செய்தனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App