facebook pixel
chevron_right Top
transparent
வாழும் பகுதியின் நில அமைப்பை உணருங்கள்:பேரிடர் பாதிப்பை தவிர்க்கலாம்
ஊட்டி;'வாழும் பகுதியின் நில அமைப்பை உணர்ந்து கொண்டால், பேரிடர் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டது.நேற்று, உலக பேரிடர் இன்னல் தடுப்பு தினம், கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, ஊட்டி தீயணைப்பு நிலையம் சார்பில், ஊட்டி ரெக்ஸ் பள்ளியில், பேரிடர் இன்னல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி முதல்வர் அடைக்கலம் முன்னிலை வகித்தார். நீலகிரி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் (கூடுதல் பொறுப்பு) சந்திரகுமார் பேசியதாவது;நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்படக் கூடிய மாவட்டமாக நீலகிரி அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் நில அமைப்பை தெரிந்துக் கொள்ள வேண்டும். தொடர் மழை, வெள்ளப் பெருக்கு சமயங்களில், அந்த இடங்கள் மண் மற்றும் நிலச்சரிவு ஏற்படுமா என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App