facebook pixel
chevron_right Top
transparent
விலங்குகளின் தகவல் தொடர்பை, பட்டாசு சப்தம் துண்டிக்கும்
ஊட்டிக்கு வரும் பயணிகளில் பெரும்பாலானோர், மலைகள், அடர்ந்த வனங்கள் சூழ்ந்த வனம், வனத்தை ஒட்டிய இடங்களில் உள்ள விடுதிகளில், ஓய்வெடுக்க விரும்புகின்றனர். குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பக வனத்தை சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் தங்கி, வன விலங்குகளை கண்டு வியக்கின்றனர். குறிப்பாக, யானைகளின் 'அல்ட்ரா சோனிக் சவுண்ட்' என்ற தகவல் பரிமாற்ற எல்லை, 3 கி.மீ., துாரத்துக்கு இருக்கும். பட்டாசு சப்தம், விலங்குகளின் தகவல் பரிமாற்றம், வழித்தடத்துக்கு இடையூறு ஏற்படுத்தும். இதனால், யானைகள் தங்களின் வழித்தடங்களை மாற்றிக் கொள்ளும்; இது, மனித - விலங்கு மோதலுக்கு காரணமாக மாறும். அது தவிர, வெடி சப்தத்தால், வண்ணத்துப் பூச்சி உட்பட சிறிய பூச்சி, பறவையினங்கள் இறந்து போகும் வாய்ப்பும் உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App