facebook pixel
chevron_right Top
transparent
வனப்பகுதியில் தீபாவளி; விலங்குகளுக்கு 'வலி':விழிப்புணர்வு ஒன்றே தீர்வுக்கு வழி
ஊட்டி;'விலங்குகளின் தகவல் தொடர்பை, பட்டாசு சப்தம் துண்டிக்கும்; இது, மனித - விலங்கு மோதலுக்கு காரணமாகும்' என, தெரிவிக்கப்பட்டது.பண்டிகை, விழாக்கால விடுமுறையில், 'குளுகுளு' ஊட்டிக்கு படையெடுக்கும் கோவை, திருப்பூர் உட்பட அண்டைய மாவட்ட, வெளிமாநில மக்களை, மலை மாவட்டத்தின் இதமான காலநிலை, உற்சாகமாய் வரவேற்கிறது. ஊட்டிக்கு வரும் பயணிகளில் பெரும்பாலானோர், மலைகள், அடர்ந்த வனங்கள் சூழ்ந்த வனம், வனத்தை ஒட்டிய இடங்களில் உள்ள விடுதிகளில், ஓய்வெடுக்க விரும்புகின்றனர். குறிப்பாக, யானைகளின் 'அல்ட்ரா சோனிக் சவுண்ட்' என்ற தகவல் பரிமாற்ற எல்லை, 3 கி.மீ., துாரத்துக்கு இருக்கும். பட்டாசு சப்தம், விலங்குகளின் தகவல் பரிமாற்றம், வழித்தடத்துக்கு இடையூறு ஏற்படுத்தும். இதனால், யானைகள் தங்களின் வழித்தடங்களை மாற்றிக் கொள்ளும்; இது, மனித - விலங்கு மோதலுக்கு காரணமாக மாறும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App