facebook pixel
chevron_right Top
transparent
வன எல்லையில் பட்டாசு:வனத்துறையினர் "அட்வைஸ்'
உடுமலை;தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய தனியார் ரிசார்ட்'களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.தீபாவளி பண்டிகை வரும், 18ல், நாடெங்கும் கொண்டாடப்படவுள்ளது. சிலர், சுற்றுலாத்தலங்களுக்கு சென்றும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அதன்படி, மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் உள்ள தனியார் ரிசார்ட்'களில், முன்பதிவு துவங்கியுள்ளது.இங்கு தங்கும் சுற்றுலாப்பயணிகள், தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு வெடித்து கொண்டாடுவர். தடுக்கும் வகையில், தனியார் ரிசார்ட்'களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய கிராமங்களிலும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அதிகாரிகள் கூறுகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான தனியார் ரிசார்ட்'கள் உள்ளன. தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App