facebook pixel
chevron_right Top
transparent
நிப்ட்-டீ கல்லூரியில் விற்பனை திருவிழா
திருப்பூர்;திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில், வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர்கள், விற்பனை திருவிழா நடத்தினர். மாணவ, மாணவியர், தாங்கள் தயார் செய்த உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்தனர். வட இந்திய உணவு வகைகள் விற்பனை அரங்கை, கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார். முதல் விற்பனையை, துணை முதல்வர் தயாளராஜன் துவக்கிவைத்தார். பழரசம் அங்காடியை, வணிக வியல் துறை தலைவர் கலையரசி; இனிப்பு, கார வகை. விற்பனையகத்தை, துணை பேராசிரியர் ராஜா திறந்துவைத்தனர். மாணவ, மாணவியருக்கு, அறிவுத்திறன் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. விளையாட்டு அரங்கை, பேராசிரியர் வேல்மதி திறந்துவைத்தார். முன்னதாக, அரங்கை பார்வையிட வந்த மாணவர்கள், பொதுமக்களு க்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App