facebook pixel
chevron_right Top
transparent
''பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் போராடக்கூடாது!'' -கேரள உயர் நீதிமன்றம் அதிரடி
"பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் போராடக்கூடாது" எனக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பொதுவாகக் கல்லூரிகளில் மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவர். இது, இந்தியாவெங்கும் உள்ள கல்லூரிகளில் நடக்கக்கூடியதுதான் என்றாலும், கேரளாவில் இதுபோன்று மாணவர்கள் போராட்டம் நடத்தத் தடை விதித்துள்ளது அந்த மாநில உயர் நீதிமன்றம். இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ் குஜராத் தேர்தல் தேதி அறிவிக்காததற்கு இதுதான் காரணமா? கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னை என்ற இடத்தில் செயல்பட்டுவரும் எம்.இ.எஸ் பொன்னைக் கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அந்தக் கல்லூரியின் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையைத் தலைமை நீதிபதி நவநிதி பிரசாத் அமர்வு இன்று விசாரித்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App