facebook pixel
chevron_right Top
transparent
விபத்தில் மூளைச்சாவு: தொழிலாளி மகன் உடல் உறுப்புகள் தானம்
மதுரை மேலூரை சேர்ந்தவர் அழகுமணிகண்டன் (19). நண்பர் பார்த்திபனுடன் மதுரைக்கு டூவீலரில் சென்ற போது ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தனர். மகனின் உடல் உறுப்புகளை தானம் தருவதற்கு அவரது தந்தை பிச்சை ஒப்புக்கொண்டார். அழகுமணிகண்டனின் கல்லீரல், இருதயம், கண்கள் உள்ளிட்ட 7 உறுப்புக்கள் தானமாக அளிக்கப்பட்டது. இருதயம் மற்றும் கல்லீரல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்கள் மதுரையை சேர்ந்தவர்களுக்கு பொருத்தப்பட்டது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App