facebook pixel
chevron_right Top
transparent
விவசாய கடன் வழங்கியதாக வங்கியில் ரூ.3 கோடி மோசடி: ஐகோர்ட் கிளையில் விவசாயிகள் வழக்கு
விவசாயக்கடன் வழங்கியதாக அரசு வங்கியில் ரூ.3 கோடி மோசடி நடந்துள்ளதாக விவசாயிகள் ஐகோர்ட் கிளையில் மனு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வரபட்டி, புளியம்பட்டி, கரட்டுபட்டி, வரதராஜபுரம், நாகப்பனூர், வரலைப்பட்டி, அரியபித்தன்பட்டி, ஆத்துமேடு, தம்மனம்பட்டி, பாலம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி உள்ளிட்ட 40 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:வேடசந்தூர் அரசு வங்கியில் விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் விவசாயக்கடன் வழங்குவதாக கூறினர். இதன்படி கடந்த 2015ல் வங்கிக்கணக்கு துவக்கி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தோம். நீண்ட நாட்களாக கடன் வழங்கப்படவில்லை.இதனிடையே வாங்கிய கடனை செலுத்துமாறு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. கடன் வழங்கப்படாத நிலையில் நோட்டீஸ் வந்தது பெரும் அதிர்ச்சியை தந்தது. இதையடுத்து வங்கிக்கு சென்று விசாரித்தோம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App