facebook pixel
chevron_right Top
transparent
டெங்குவுக்கு மேலும் 7 பேர் பலி
டெங்கு காய்ச்சலுக்கு நேற்று தஞ்சையைச் சேர்ந்த அரசு பெண் வக்கீல் உள்பட 7 பேர் பலியாகினர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பினால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு பாதிப்பால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த தர்மபுரி காரிமங்கலம் அருகே ராமியம்பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள்(40). திருப்பூர் மாவட்டம் குள்ளகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஓவியா(2), மதுரை ஆனையூரை சேர்ந்தவர் நூர்ஜகான்(60), தஞ்சை மாவட்டம் ஊரணிபுரத்தை சேர்ந்த அரசு வக்கீல் கவிதா(35) ஆகிய 5 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலா ஒருவர் டெங்கு பாதிப்பால் இறந்தனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App