facebook pixel
chevron_right Top
transparent
30 ஆண்டாக இயங்கிய காட்பாடி டெல் தொழிற்சாலை மூடல்: 226 பேருக்கு ரூ.47.15 கோடி நிலுவை தொகை
கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்த காட்பாடி டெல் வெடிமருந்து தொழிற்சாலை நேற்று மூடப்பட்டது. இதில் விஆர்எஸ் வழங்கிய தொழிலாளர்கள் 226 பேருக்கு ரூ.47.15 கோடி செட்டில்மென்டுடன் நிலுவை தொகையும் சேர்த்து வழங்கப்பட்டது.வேலூர் அடுத்த காட்பாடி டெல் வெடிமருந்து தொழிற்சாலை கடந்த 1986ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக டெல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை நிர்வாகம் அறிவித்தது. அப்போது ஒரு சிலர் விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்தனர். ஆனாலும், படிப்படியாக உற்பத்தி குறைந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App