facebook pixel
chevron_right Top
transparent
புளுவேல் விளையாட்டை தடை செய்ய புதிய வல்லுனர் குழுவை ஏன் அமைக்கக் கூடாது? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
'உயிர்களை பலி வாங்கும் புளுவேல் விளையாட்டை தடை செய்ய புதிய வல்லுனர்கள் கொண்ட குழுவை ஏன் அமைக்கக் கூடாது?' என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. சமூக வலைத்தளங்களில், 'புளூவேல் சேலஞ்' என்ற பெயரில் வலம் வரும் ஆன்லைன் விளையாட்டை விளையாடுபவர்கள் தற்கொலை செய்யும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். தமிழகத்தில் இந்த விளையாட்டை முற்றிலும் தடை செய்து 2 வாரங்களுக்கு முன் மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில், இந்த கொடூரமான விளையாட்டுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் சினேகா கலிகர் என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்-்ந்துள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App