facebook pixel
chevron_right Top
transparent
தேர்தல் அறிவித்த மறுநாளே இமாச்சல் முதல்வர் சொத்து முடக்கம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, இமாச்சல பிரதேச முதல்வரின் சொத்தை அமலாக்கத் துறை முடக்கியிருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் இம்மாநில முதல்வர் வீர்பத்ர சிங்கின் ரூ.5.6 கோடி மதிப்புள்ள சொத்தை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது. வீர்பத்ர சிங், அவரது குடும்பத்தினர் மீது கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே அமலாக்கத் துறை அவருடைய சொத்தை முடக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App