facebook pixel
chevron_right Top
transparent
ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற புதிய உத்தரவுகளைபிறப்பிக்க கூடாது: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை
ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை வெளியேற்றும் வழக்கை நவம்பர் 21 முதல் விரிவாக விசாரிக்க உள்ளதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், இந்த பிரச்னையில் மத்திய அரசு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கக் கூடாது என அறிவுறுத்தியது. மியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு பயந்து அகதிகளாக வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்களில் 14 ஆயிரம் பேர் இந்தியாவில் சட்டப்பூர்வ அதிகளாக தங்கியுள்ளனர். தேசப் பாதுகாப்பு கருதி இவர்களை மியான்மர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, உரிய அனுமதியின்றி தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளை உடனடியாக வெளியேற்றுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதை எதிர்த்து ரோஹிங்கியா அகதிகளான முகமது சலிமுல்லா, முகமது ஷாகிர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App