facebook pixel
chevron_right Top
transparent
8 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய்: 'லம்பக்டோமி' சிகிச்சை மூலம் மார்பகம் அகற்றுவதை தவிர்க்கலாம்
மார்பகத்தில் ஏற்படும் புற்று நோய் கட்டிகளை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து, 'லம்பக்டோமி' சிகிச்சை மூலம் அகற்றினால், மார்பக அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மார்ப புற்றுநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் குணமடைய முடியும். முற்றிவிட்டால் மார்பக அறுவை சிகிச்சையில் (மாஸ்டெக்டோமி) முடியும் என்கிறார் மார்பகவியல் ஆசிய அமைப்பின் (அசோமா) தலைவர் டாக்டர் சிந்தாமணி. மார்பகத்தை இழக்கும்போது, பெண்மையின் அடையாளத்தையே இழந்து விட்டதாக பெண்கள் நிலைகுலைந்து விடுகின்றனர்.மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக டெல்லியில் கடந்த வாரம் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கை எய்ம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை துறை, தேசிய புற்றுநோய் மையம், சப்தர்ஜங் மருத்துவமனை, அசோமா ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App