facebook pixel
chevron_right Business
transparent
தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக டிசம்பர் வரை தங்க பத்திரம் விற்பனை
தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கருத்தில் கொண்டு, தங்க பத்திரங்கள் டிசம்பர் வரை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வீடுகள், கோயில்களில் முடங்கி கிடக்கும் தங்கத்தை வெளிக்கொண்டு வரவும், தாள்கள் வடிவிலான தங்கத்தில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இவற்றில் ஒன்று தங்க பத்திர திட்டம். இதை அறிமுகம் செய்தபோது, ஒரு நபர் ஆண்டுக்கு 500 கிராம் மட்டுமே முதீடு செய்யலாம் என இருந்தது. இது தற்போது 4 கிலோவாக உயர்த்தப்பட்டுளளது. இதுபோல், அறக்கட்டளை, நிறுவனங்கள் இதில் முதலீடு செய்யும் வரம்பு 20 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இந்திய வெள்ளி மற்றும் தங்க நகை விற்பனையாளர் சங்கம் நிர்ணயித்த முந்தைய வார விலை அடிப்படையில் பத்திரத்தின் விலை முடிவு செய்யப்படுகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App