facebook pixel
chevron_right Business
transparent
மலையோர பகுதிகளில் மழை: குமரியில் ரப்பர் பால்வடிப்பு தொழில் கடும் பாதிப்பு
குமரி மாவட்ட மக்களின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக ரப்பர் விளங்கி வருகிறது. உலகத்தரம் வாய்ந்த ரப்பர் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரப்பரின் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரப்பர் விலை கிலோ ரூ.100, ரூ.110 என சரிந்து விட்டது. இதனால் ரப்பர் விவசாயிகள் பல்வேறு வகைகளிலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது ரப்பர் ஷீட் கிலோ ரூ.112, ஒட்டுக்கறை ரூ.81 என்ற அளவில் இருந்து வருகிறது. பொதுவாக ரப்பர் மரங்களில் டிசம்பர், ஜனவரி மாதங்கள் இலையுதிர் காலமாகும். இந்த காலகட்டத்தில் ரப்பர் பால் வடிப்பை நிறுத்தி விடுவார்கள். அதற்கு முந்தைய அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக ரப்பர் பால் கிடைப்பது வழக்கம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App