facebook pixel
chevron_right Politics
transparent
காங்கிரசுக்கு காட்டமான கேள்வி மகன் மீது ஊழல் புகார்: அமித்ஷா விளக்கம்
தனது மகனின் நிறுவனம் மீது கூறப்பட்ட ஊழல் புகார் குறித்து பாஜ தலைவர் அமித் ஷா முதல் முறையாக விளக்கம் அளித்தார். பாஜ தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 2015-16ம் நிதியாண்டில் 16 ஆயிரம் மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது என்று 'தி வயர்' என்ற இணையதளத்தில் செய்தி வெளியானது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மத்திய அமைச்சர்கள் அத்தனை பேரும் இந்த செய்தியை மறுத்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடியும் அமித் ஷாவும் இது பற்றி எந்த விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்தனர். இந்நிலையில், குஜராத் சென்றுள்ள அமித் ஷா இது தொடர்பான கேள்விக்கு முதல்முறையாக பதில் அளித்துள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App