facebook pixel
chevron_right Politics
transparent
காங்.,தலைவர் யார்? ராகுல்காந்தியுடன் திருநாவுக்கரசர் இன்று சந்திப்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பை மேலிடம் வெளியிட உள்ள நிலையில், திருநாவுக்கரசர் டெல்லியில் இன்று ராகுல்காந்தியை சந்தித்து பேசுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தமிழக காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்திக்கு வழங்குவது' என்று தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ராகுல் காந்தியிடம் வழங்குவதற்காக திருநாவுக்கரசர் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். திருநாவுக்கரசர் இன்று அவரை சந்திக்கிறார். தமிழக காங்கிரஸ் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் சோனியாகாந்திக்கு வழங்கியுள்ளனர். திருநாவுக்கரசர் தலைவராக தொடர்வதை தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற கோஷ்டி தலைவர்கள் விரும்பவில்லை. அவர்கள் மேலிடத்தில் இவரை மாற்றுவதற்கு காய் நகர்த்தி வருகின்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App