facebook pixel
chevron_right Politics
transparent
ஆர்.கே.நகர் தேர்தலை சந்திக்க தயார்: ரூ.89 கோடி வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:. டெங்கு குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து காலதாமதமாக வந்துள்ள மத்தியக் குழு உரிய நடவடிக்கை எடுக்குமா? டெங்குவை கட்டுப்படுத்த மத்தியக் குழு வந்திருப்பதை உள்ளபடியே வரவேற்கிறோம். அதே நேரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அதே டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவக்குழு ஒன்று வந்திருந்தது. ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்ற உண்மையை அந்தக் குழு நாட்டு மக்களுக்கு இதுவரை வெளிப்படுத்தவில்லை. எனவே, டெல்லியில் இருந்து வந்துள்ள குழு டெங்கு குறித்த உண்மையான விவரங்களை எடுத்துச் சொல்ல வேண்டும், டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App