facebook pixel
chevron_right Politics
transparent
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது: விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விஜயகாந்த் அளித்த பேட்டி: டெங்கு பாதிப்பை பார்வையிட வரும் மத்தியக் குழுவால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. அந்த குழுவினர் இதை பிரதமர் மோடியிடம் போய்தான் சொல்ல போகிறார்கள். மோடியிடம் சொன்னால் என்ன நடக்க போகிறது. தமிழக அரசுக்கு டெங்கு நோயை கட்டுப்படுத்துவதை விட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்துவதுதான் முக்கியமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் டெங்கு ஒழியும். சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் தேமுதிக போட்டியிடாது. இடைத்தேர்தலுக்கு முன்பாக தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அரசு துரித நடவடிக்கை எடுத்தால்தான் டெங்குவை ஒழிக்க முடியும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App