facebook pixel
chevron_right Politics
transparent
உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்ட மத்திய நிதியை கான்ட்ராக்டுகளுக்கு வழங்குவதை தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:. மக்களின் அத்தியாவசிய தேவைக்கான மின்கட்டணத்தையும், குடிநீர் கட்டணத்தையும் செலுத்த விடாமல், மத்திய நிதியாணையம் அளித்துள்ள அடிப்படை மானியத் தொகையை கான்ட்ராக்டுகள் மற்றும் டெண்டர்களுக்கு முழுவதுமாக பயன்படுத்துங்கள் என்று நகராட்சி மற்றும் மாநகரட்சி ஆணையர்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் கடுமையான அழுத்தம் கொடுக்கும் அவலநிலை உள்ளாட்சி நிர்வாகத்தில் உருவாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தால் முடங்கிப் போயிருக்கும் உள்ளா ட்சி நிர்வாகம், மேலும் ஸ்தம்பித்துவிடும் வகையில் இதுபோன்ற அழுத்தங்களைக் கொடுக் கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நடவடிக்கைகளுக்கு திமுக சார் பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் உள்ளாட்சி நிர்வாகம் அமைச்சரின் கட்டுப்பாட்டில் சிக்கி ஏற்கனவே ஊழல் மயமாகி வருகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App