facebook pixel
chevron_right Sports
transparent
டியான்ஜின் ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் ஷரபோவா
சீனாவில் நடக்கும் டியான்ஜின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.கால் இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில் ஷரபோவா, தரவரிசையில் 196வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டிபனி வோயேகிலேயை எதிர்த்து விளையாடினார். தகுதி சுற்று மூலம் பிரதான போட்டியில் நுழைந்தவரான வோயேகிலே, ஷரபோவாவின் அதிரடி ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினார். ஷரபோவா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். ஊக்க மருந்து தடைக்கு பிறகு, கடந்த ஏப்ரலில் களமிறங்கிய ஷரபோவா அரை இறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை. அரை இறுதியில் இவர் நடப்பு சாம்பியனான சீனாவின் சுவாய் பெங்கை சந்திக்கிறார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App