facebook pixel
chevron_right Sports
transparent
ஆசிய கோப்பை ஹாக்கி: வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் ஏ பிரிவில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.தாக்காவில் நேற்று நடந்த இப்போட்டியில் சொந்த மண்ணில் களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணியின் அதிரடியில் தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. அவரைத் தொடர்ந்து, அக்‌ஷதீப் சிங் (10வது நிமிடம்), லலித் உபாத்யாய் (13), அமித் ரோகிதாஸ் (20), ராமன்தீப் சிங் (46) தலா ஒரு கோல் அடித்தனர். ஹர்மன்பிரீத் சிங் 28, 47வது நிமிடங்களில் 2 கோல் அடித்து அசத்தினார். பதிலுக்கு வங்கதேச வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முதல் லீக் போட்டியில் நமது அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App