facebook pixel
chevron_right Top
transparent
அழிவின் விளிம்பில் சோலைக்காடு:மக்கள் மனது வைத்தால் பாதுகாக்கலாம்
மேற்கு தொடர்ச்சி மலையில், அழியும் தருவாயில் உள்ள சோலைக்காடுகளை பாதுகாக்க, மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் மட்டுமே, குட்டையான மரங்களும், புல்வெளிகளும் கொண்ட, சோலைக்காடுகள் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் முதுமலை மற்றும் முக்கூர்த்தி; திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல்; கோவை மாவட்டத்தில் ஆனைமலை; நெல்லை மாவட்டத்தில் அகஸ்தியர்மலை என, தமிழகத்தில், 30 சோலைக்காடுகள் உள்ளன. இக்காடுகள், நீர்வள ஆதாரத்துக்கு பெரிதும் உதவுகின்றன. சோலைக்காட்டில் உள்ள மரங்கள், மழை நீரை வேரில் சேமித்து வைத்து, சிறிது சிறிதாக வெளியேற்றும். புல்வெளியில் பஞ்சு போன்ற அமைப்பும், சோலைக்காட்டின் மண் பரப்பும், மழை நீரை சேமிக்கும். இந்த நீர் ஆதார அமைப்புகள் மூலமாகவே , அருவிகள் மற்றும் ஆறுகளில், ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App