facebook pixel
chevron_right Top
transparent
பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது:4 கிலோ மட்டுமே வினியோகிக்க அனுமதி
மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் பரவலாக பெய்த மழையால், பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது; இதனால், கோட்டா' முறை அமல்படுத்தப்பட்டு, ஒரு உறுப்பினருக்கு, குறைந்தபட்சம், நான்கு கிலோ வினியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில், மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, எடக்காடு, இத்தலார், மேற்கு நாடு, கைக்காட்டி, மகாலிங்கா ஆகிய, எட்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உறுப்பினர்களாக உள்ள, 15 ஆயிரம் பேர், தங்களது தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை, அந்தந்த தொழிற்சாலைக்கு வினியோகிக்கின்றனர். நடப்பாண்டில் பெய்த மழையால், தேயிலை செடிகளுக்கு உகந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. தென் மேற்கு பருவமழையால், பகல் நேரத்தில் வெயில் தென்படுவதால், தேயிலை செடிகள் துளிர்விட்டு, பசுந்தேயிலை மகசூல் படிப்படியாக அதிகரித்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App