facebook pixel
chevron_right Top
transparent
வாரிசுச்சான்றுக்கு கவனிப்பு: 'வாட்ஸ் ஆப்'பில் வைரலான வீடியோ
கன்னிவாடி, வாரிசுச்சான்றுக்கு 'கவனிப்பை' எதிர்பார்த்த வருவாய் ஆய்வாளர் பற்றிய வீடியோ, 'வாட்ஸ் ஆப்'பில் வைரலாக பரவி வருகிறது. அரசு அலுவலகங்களில் கடைநிலை ஊழியர் முதல், உயர் பதவி அதிகாரிகள் வரை, 'அன்பளிப்பு' கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினாலும், அவ்வப்போது பலர் இப்பிரச்னையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்ற அவலங்களை, அவ்வப்போது பிரபலப்படுத்துவதில் சமூக வலைதளங்கள் வரிந்து கட்டி செயல்படுகின்றன. தற்போது வாரிசுச்சான்று வழங்குவதற்காக, 'கவனிக்க' வேண்டும் என கறாராக பேசும் வருவாய் அலுவலர் ஒருவரின் வீடியோ பதிவு, தற்போது 'பேஸ்புக்' 'வாட்ஸ் ஆப்' போன்றவற்றில் வைரலாக பரவி வருகிறது. திண்டுக்கல் மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட, தருமத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வனின் உரையாடல் இதில் இடம் பெற்றுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App