facebook pixel
chevron_right Top
transparent
கட்டைவிரல் ‛'ரேகை'களால் அப்துல்கலாம் ஓவியம்
பழநி, பழநி தனியார் பள்ளி மாணவர்கள் 20 ஆயிரம் கட்டைவிரல் ரேகைகளால் 10அடி உயரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஓவியத்தை வரைந்துள்ளனர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் (நாளை) அக்.,15ல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பழநி சுவாமி மெட்ரிக் மேல். நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரி, முகேஷ், வெங்கட், மனோஜ், சஞ்சய் ஆகியோர் இந்த சாதனை புரிந்துள்ளனர். விரல் 'ரேகை'களைப் பயன்படுத்தி அழகிய அப்துல்கலாம் உருவத்தை வரைந்து உள்ளனர். அவர்களை பள்ளி தாளாளர் ரத்தினம், முதல்வர் சின்னச்சாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். ஆசிரியர் அன்புச்செல்வன் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த ராமேஸ்வரத்தில் கட்டைவிரல் ரேகை ஓவியத்தை பொதுமக்கள் பார்வைக்காக வைக்க உள்ளோம். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பார்க்கும் வகையில் கண்காட்சிகளிலும் வைக்கப்படும் என்றார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App