facebook pixel
chevron_right Top
transparent
நாய் கடித்து 8 பேர் காயம்
பாகாநத்தம் பகுதியில் ஓரு வீட்டில் வளர்ந்து வந்த நாய் அப்பகுதியில் நடந்து சென்ற புதுார், மலைப்பட்டி, பாகநத்தம் கிராமங்களை சேர்ந்தவர்களை திடீரென கடிக்கத் துவங்கியது. அப்பகுதி இளைஞர்கள் நாயை பிடிக்கும் நோக்கில் துரத்திச் சென்றனர். தப்பியோடிய நாய், கொம்பேரிபட்டி பகுதியில் நின்றிருந்த புஷ்பம், ஸ்ரீராமபுரம் பழனிச்சாமி, வெங்கடாஜலபுரம் வரதம்மாள் உள்பட 8 பேரை கடித்துக் குதறியது. இதன் பின்னர் நாய் கொல்லப்பட்டது. நாய்க்கடி பாதிப்பிற்குள்ளானவர்கள் பிலாத்து மற்றும் எரியோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றனர். நாய்க்கடி பாதிப்பிற்குள்ளானவர்கள் சிறிதும் அலட்சியப்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என, சுகாதார ஆய்வாளர்கள் அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App