facebook pixel
chevron_right Top
transparent
திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனினும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் சாரல் மழையால் அணைகளுக்கு சீராக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மழை நீரும், அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணரும் பரளியாறு வழியாக வந்து திற்பரப்பு பாறைகளில் பாய்ந்து அருவியாக கொட்டுகிறது.கடந்த இரண்டு நாட்களாக அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தண்ணீர் மிக அதிகமாக வரும் போது சிறிது நேரம் தடை விதிக்கப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App